Sivakarthikeyan succeeds as a singer too :
சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதோடு, இவரெல்லாம் ஒரு ஹீரோவாக என்று சொன்னவர்களேகூட இப்போது சிவகார்த்திகேயனிடம் கால்சீட் கேட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனின் நேரம் உச்சத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், சினிமாவில் பாட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்திராத அவரை திடீரென்று ஒருநாள் அழைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு பாடல் பாட வேண்டும என்று இசையமைப்பாளர் டி.இமான் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு சிவாவுக்கு தலை சுற்றி விட்டதாம். நானெல்லாம் பாடினால் யார் கேட்கிறது. தமிழ்நாட்டு மக்களோட கதி என்னவாகிறது என்று அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் இரண்டு நாட்கள் மெளனம் காத்து வந்தாராம்.
மீண்டும் இமான், தம்பி எப்போ ரெக்கார்டிங் தியேட்டருக்கு வர்றீங்க? என்று கேட்டபோது, நான் பாடினால் கேட்கிற மாதிரி இருக்குமா சார் என்றாராம். அதற்கு, யாரு பாடுனாரும் கேட்பாங்க. ரசிகருங்களை கேட்க வைக்கிறது மியூசிக் டைரக்டரோட கையில இருக்கு என்றாராம். அதையடுத்து இரண்டு மனதோடு பாடினாராம் சிவகார்த்திகேயன்.
ஆனால், இப்போது யாருமே எதிர்பார்க்காத வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் யு டியூப்பில் வெளியிடப்பட்டு மெகா ஹிட் பாடலாகி விட்டது. இதனால் இப்போது அவரது பாடலுக்கும் கோடம்பாக்கத்தில் மௌசு கூடியிருக்கிறது. சில இசையமைப்பாளர்கள் மற்ற ஹீரோக்களுக்கும் சிம்பு மாதிரி சிவகார்த்திகேயனை பாட அழைக்கிறார்களாம். அதனால், அடுத்து தனுஷ் செய்யாமல் விட்டதை தான் பிடித்து, சிம்புக்கு போட்டியாக சிங்கராகவும் க்கிறார் சிவகார்த்திகேயன்.
coutesy: newyarl.com
coutesy: newyarl.com